வெள்ளிமணி

நிகழ்வுகள்

9th Apr 2021 03:42 PM

ADVERTISEMENT


யஜுர்வேத ஜடா பாராயணம்


தஞ்சை மாவட்டம், திருவையாறு திருத்தலத்தில் பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு வேத பண்டிதர்களால் நடத்தப்படும் ஸ்ரீகிருஷ்ண யஜுர்வேத ஜடாபாராயணம் ஏப்ரல் 17}இல் தொடங்கி 29 }ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிகழ்வு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை சுவாமி சந்நிதியிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை வேதபாராயண மாதாஸ்ரீ கிருகத்திலும், இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ ஐயாறப்பர் சந்நிதியிலும் நடைபெறும். இந்த மகா புண்ணிய கைங்கர்யத்தில் பக்தர்கள் அவசியம் கலந்து கொண்டு உதவிட வேண்டும். தொடர்புக்கு: எம்.அனந்த நாராயணன் } 9443975933.


புத்திர, காம, இஷ்ட ஜெயப் பிரத வேள்வி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது  ஒப்பிலியப்பன் கோயில். இதனை வேங்கடாசலபதி கோயில் எனவும் அழைப்பதுண்டு.  இத்திருக்கோயிலில் ஸ்ரீராமநவமி உற்சவம் விமரிசையாக நடைபெறும். 

ADVERTISEMENT

ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி புத்திர, காம, இஷ்ட ஜெயப்பிரத வேள்வியைச் செய்த பின்பே ராமரும், சகோதரர்களும் அவதரித்தார்கள் என்பதால் அதனைப் பின்பற்றி இத்திருக்கோயிலிலும் புத்திர, காம, இஷ்ட ஜெயப்பிரத வேள்வி ஏப்.18}ஆம் தேதி நடைபெறும். இவ்வேள்வியில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: 0435}2463385 / 9443528307.

ஏழாம் திருமுறை முற்றோதல்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை முற்றோதல் நிகழ்வு ஏப்.11}ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். இடம்: ஏ.வி.பி. அறக்கட்டளை வெள்ளி விழா கலையரங்கம், திருமுருகன் பூண்டி கோயில் பின்புறம், திருப்பூர். தொடர்புக்கு: 9843944122 / 9894120362.
}ஆர்.வி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT