வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர்


ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமாக நிற்கிறது. ஆதலால், "இந்தப் பிரபஞ்சம் என்னும் எல்லாப் பொருள்களும் வெறும் தோற்றமே' என்னும் தெளிவைப் பெற வேண்டும்.

-ஆதிசங்கரர் (úஸôபான பஞ்சகம்)

உலகில் ஒருவன் சாத்துவிக இயல்போடு நடந்துகொண்டால், "அவனைச் சக்தியற்றவன்' என்றே சாமான்ய மக்கள் நினைத்துவிடுகிறார்கள். அவர்கள் அவனை அலட்சியமே செய்வார்கள்.

அதனால் உலகத்தில் காரியம் நடக்க வேண்டுமானால், அதிகார தோரணையைக் காட்டிக் கொஞ்சம் கடுமையாகவும் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

-வால்மீகி ராமாயணம்

பிறப்பாலும் தொழிலாலும் வர்ணாசிரமங்களாலும், ஜாதியாலும் ஒருவனுக்கு இந்த உடலில், "நான்' என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே விஷ்ணுவுக்குப்பிரியமானவன்.

-சுருதி கீதை

""எல்லாவற்றையும் படைத்துக் காத்து ஒடுக்கி, ஒடுக்கியபடியே மீண்டும் படைப்பவர் சிவபெருமான். அவர் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு அருளி ஆட்கொள்ளும் தலைவராக விளங்குகிறார். அவர் முதலும் முடிவும் இல்லாதவராக விளங்குகிறார்'' என்று வேதச் சாகைகள் (பிரிவுகள்) எடுத்துக் கூறுகின்றன.

-கந்த புராணம்

மகன் மீது எப்போதும் அன்பு கொண்டு, அவனுக்கு வேண்டியவற்றைத் தருவதையே தன் விருப்பமாகக் கொண்டவள் தாய். அதுபோல் உயிர்கள் மீது கருணைகொண்ட தயாபரனாக இறைவன் விளங்குகிறான்.

-அருணகிரிநாதர்

உலகத்தில் சிற்றினத்தார் வாழ்க்கைக்கும் சீரடியார் வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு; சிற்றினத்தார் வெறும் உலகியல் ஆசையிலேயே உழல்பவர்கள்; சீரடியார் இறைவனது பற்றிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்.

-பட்டினத்தார்

தாய் தந்தைக்குப் பணிவிடை செய்பவர்கள், பசித்தவர்களுக்கு உணவு தருபவர்கள், தோப்பு கிணறு தண்ணீர் பந்தல் நிறுவுகிறவர்கள் ஆகியவர்கள் சொர்க்கம் செல்கிறார்கள்.

-மகாபாரதத்தில் பீஷ்மர்

கலியுகத்திற்கு நாரதர் காட்டிய பக்திநெறியே சிறந்தது. இறைவனின் திருநாமத்தையும் மகிமையையும் பாடுவதையும், ""எம்பெருமானே, எனக்கு ஞானத்தைக் கொடுங்கள், எனக்குப் பக்தியைக் கொடுங்கள், எனக்கு உன் காட்சியைக் கொடுங்கள்'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதையும் செய்ய வேண்டும்.

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

உலகப் பொருள்களால் பெறப்படும் விஷய சுகம் சுகமல்ல; யதார்த்த சாந்தியே சுகஸ்வரூபம்.

தீட்டுவதால் கத்திமுனை கூர்மை அடைவது போல, அப்பியாசத்தால் மனம் மேன்மேலும் சூட்சுமமாகிறது. அத்தகைய மனம் அந்தர்முகத்திலும் பகிர்முகத்திலும்கூட முன்பைவிட நன்றாக வேலை செய்யும்.

ஞானம், பக்தி, யோகம் என்னும் மூன்று வழிகளிலும்கூட எந்தக் காரணத்தாலோ ஒருவனின் மனம் ஈடுபடாவிட்டால், கர்மயோக மார்க்கத்தை அவன் அனுசரிக்கலாம். அதனால் சத்துவகுணத் தெளிவு பெற்று குறுகிய சுயநலமற்ற அமைதியை அடையலாம்; உள்ளம் விசாலமாகிய நிலையில் ஞானம், பக்தி, யோக மார்க்கங்களைப் பின்பற்றலாம்; அல்லது நன்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகம் ஒன்றினாலேயேகூட உள்ள மலர்ச்சி தானாகவே உண்டாகலாம்.

-ஸ்ரீ ரமண மகரிஷி

ஆத்மாவை (கத்தியால்) வெட்ட முடியாது, (நெருப்பால்) எரிக்க முடியாது, (நீரால்) நனைக்க முடியாது, (காற்றால்) உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது.

-பகவத்கீதை 2-24

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT