வெள்ளிமணி

தாவீது-கோலியாத்தை வென்ற வரலாறு

எம்.ஜி. நிர்​மலா


சமயோஜித செயல்பாடுகள் வெற்றியையும், மேன்மையையும், புகழையும் சேர்க்கும்.
அநேகருடைய வெற்றி வாய்ப்புகளில் சமயோஜித செயல்பாடுகளினால் வாழ்வில் உயர்வு நிலைக்கு சென்றதை அறிய முடிகிறது. 
வேதாகமத்தில் இவ்வாறு சமயோஜித வாய்ப்பைப் பயன்படுத்திய வரலாறு ஒன்றுண்டு. இயேசுவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு பெலிஸ்தியர், இஸ்ரவேலர் மீது போர் தொடுத்து தொல்லை கொடுத்து வந்தனர். வெற்றி இருபக்கமும் மாறி மாறி இருந்தது. வாழ்வு மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆடு, மாடு, செல்வங்கள் திருடப்பட்டன. 
இஸ்ரவேலரின் ராஜாவாக இருந்த சவுல் தன் மக்களைக் காப்பாற்ற அதிக முயற்சி எடுக்கவில்லை. இஸ்ரவேல் மக்கள் தம் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டனர். 
அக்காலத்தில் தாவீது என்னும் சிறுவன் ஈசாயின் எட்டாவது மகனாவார். அவர் சிறுவனாக இருந்த பொழுது தெய்வபக்தியுடன், இறைவனைப் பற்றி கவிதை எழுதுவதிலும், கொடிய மிருகங்களிடமிருந்து போராடி தன் ஆடுகளைக் காப்பாற்றும் தீரம் உடையவராகவும் திகழ்ந்தார். 
ஒருமுறை ஒரு பெரிய சிங்கம் ஆடுகளின் மீது பாய்ந்தது. தாவீது சிங்கத்துடன் போரிட்டு தன் ஆடுகளைக் காப்பாற்றினார். சிங்கம் காயப்பட்டு ஓடிவிட்டது. மற்றொரு சமயம் ஒரு பெரிய கரடி ஆடுகளைக் கொல்ல வந்தது. தாவீது அதனுடன் போராடி ஆடுகளைக் காப்பாற்றினார். எப்பொழுதும் அவர் கையில் கிண்ணரம் என்னும் இசைக்கருவியில் இறைவனைத் துதித்துப் பாடிக் கொண்டே இருப்பார்.
மீண்டும் ஒரு தாக்குதலுக்கு தயாரான பெலிஸ்தியர்கள் கோலியாத் என்ற போர் வீரனை உருவாக்கினர். அவன் உடல் முழுவதும் இரும்பாலான கவசத்தை அணிந்து இருந்தான். அவன் ஒன்பது அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவனாக பேருருவம் கொண்டிருந்தான். இஸ்ரவேல் மக்கள் கோலியாத்தைக் கண்டபோது நடுநடுங்கினர். 
ஒரு குன்றின்மீது பெலிஸ்தியர்களும், இன்னொரு குன்றின்மீது இஸ்ரவேலர்களும் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர். 
கோலியாத் பெரும் சத்தமாய் தன்னோடு ஒண்டிக்கு ஒண்டி போரிட வருமாறு இஸ்ரவேலரை அழைத்தான். அவன் இஸ்ரவேலரின் தேவனை தூஷித்தான். 
தாவீதின் அண்ணன்கள் போர்ப்படையில் பொறுப்பில் இருந்தனர். 
தாவீது தன் அண்ணன்களைப் பார்க்க போர்முனைக்கு வந்திருந்தான்.  
அப்பொழுது கோலியாத் முன்புபோலவே முழக்கமிட்டான். 
அதைக் கண்ட சிறுவனாகிய தாவீது, கோலியாத்துடன் போரிட முன் வந்தான்.  
போர்க் கவசம் எதுவும் அணியாமல் தன் தோளில் கவணையும், கூழாங்கற்களையும் எடுத்துச் சென்றான். 
அவனை கோலியாத் ஏளனமாகப் பார்த்தான். உடனே தாவீது சமயோஜிதமாக ஒரு கூழாங்கல்லை கவணில் வைத்து வேகமாகச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியில் அடித்தான். கோலியாத் நிலைகுலைந்து மயக்கமுற்று கீழே விழுந்தான். 
தாவீது உடனே ஓடிப்போய் கோலியாத்தின் உறையிலிருந்து அவன் வாளை எடுத்து கோலியாத்தின் கழுத்தை வெட்டினான். அதைக் கண்டு பயந்து போன பெலிஸ்தியர்கள் ஓடிவிட்டனர்.
அந்த நாள் வெற்றியின் நாளாக இஸ்ரவேல் மக்களுக்கு அமைந்தது. பின்னர், பெலிஸ்தியரால் அவர்களுக்கு தொல்லை இல்லாமல் போய்விட்டது. மக்கள் தாவீதை தோள் மீது தூக்கிக் கொண்டு வெற்றியைக் கொண்டாடினர். இவ்வாறு தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு பெரும் வெற்றியையும், அமைதியையும் தந்தார். நம் வாழ்விலும் கர்த்தர் கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இறைவனைப் போற்றி வாழ்வோம்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT