வெள்ளிமணி

பொன்மொழிகள்!

11th Sep 2020 06:00 AM | சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT

 

சான்றோன் ஒருவன், தான் செயல்களின் பலனாகப் பெற்ற உலக அனுபவங்களை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் விளைவாக, "கர்மங்களால் இறைவனை அடைய முடியாது, உலகப்பற்றின்மையால்தான் இறைவனை அடைய முடியும்' என்பதை உணர்ந்து உலகப்பற்றின்மையைப் பெற வேண்டும். பிறகு, இறைவனை அறிவதற்காக, வேதங்களை உணர்ந்தவரும் இறைவனில் நிலைபெற்றவருமான குருவை கையில் சமித்துடன் நாட வேண்டும்.

-முண்டக உபநிஷதம்1.2.12

 

ADVERTISEMENT

சிவபெருமானே! நான் திருநீறு பூசிய மெய்யடியார்களுக்குச் சதா விருந்து வைக்க வேண்டும். அதனால் வருகிற வறுமையையும், விரதமிருந்து இளைக்கிற
 உடம்பையும் எனக்குக் கொடுத்து அருள் புரியுங்கள்.

-சிவப்பிரகாசர்

 

எரிகிற நெருப்பை தண்ணீரால் அணைப்பது போன்று, மனதில் எழுகிற கோபத்தை மகாத்மாக்கள் புத்தியால் அடக்குகிறார்கள்.
கோபத்தை அடைந்த எவன்தான் பாவத்தைச் செய்யமாட்டான்?
கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டவன் பெரியோர்களையும் கொன்றுவிடுவான்; தீய சொற்களால் சாதுக்களை அவமதித்தும் பேசுவான்; அவன்  எது சொல்லத்தக்கது, எது சொல்லத்தகாதது என்பதை 
அறியமாட்டான். 

-ஸ்ரீராமாயணத்தில் ஹனுமான் சொன்னது

 

விநாயகர் வெண்மையான உடையை உடுத்தியிருப்பவர், எங்கும் நிறைந்தவர், சந்திரனைப் போன்ற நிறமுடையவர், நான்கு கரங்களுடையவர், எப்பொழுதும் மலர்ந்த திருமுகத்துடன் விளங்குபவர். அவரை நீங்கள் எல்லா இடையூறுகளும் நீங்கும்பொருட்டு ஆழ்ந்து தியானம் செய்யுங்கள்!

-ஒரு சம்ஸ்கிருத சுலோகம்

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT