வெள்ளிமணி

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

11th Sep 2020 06:00 AM | -ஆர்.வி.

ADVERTISEMENT


கரூர் அருகே உள்ள நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் சதாசிவ பிரும்மேந்திரர் ஜீவசமாதி உள்ளது. சூரபத்மனைக் கொன்ற தோஷத்தை நீக்க முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பது ஐதீகம். இங்குள்ள அக்னீஸ்வரரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது திருநாரையூர். இங்கு திரிபுரசுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்குள்ள பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர். இவரை வேண்டிக் கொண்டால் வெளிநாடு செல்வதில் உள்ள தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளதைப்போல விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர். மற்ற ஐந்து தலங்கள்: திருவண்ணாமலை, திருமுதுகுன்றம், திருக்கடவூர், மதுரை, காசி ஆகியவை
யாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT