வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர்

"சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.
 -குமாரதந்திரம் (ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திரஸ்தவம்)

"கல்வியை விரும்புபவன் கல்வியையும், செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், மகப்பேறு விரும்புபவன் மகப்பேற்றையும், முக்தியை நாடுபவன் முக்தியையும் அடைவார்கள்.
 -ஸ்ரீ நாரத புராணம் (சங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம்)

"பிரம்மம்தான் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. -பிரச்ன உபநிஷதம்

"சிறிய பொருளையும் இகழாதே, சிறிய பொருளையும் அவமதிக்காதே. உன் வலக் கையில் செயல்திறமை இருக்கிறது; உன் இடக் கையில் வெற்றி இருக்கிறது. -அதர்வ வேதம்

"ஸ்ரீ ராமர் சொன்னது: நீ உன்னை சம்சாரத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் விருப்பமுடையவன். ஆதலால் நீ என்னுடைய உண்மையான சொரூபத்தை நன்கு அறிவதற்காக, உடனே வேதாந்தங்களைக் கற்பதில் ஈடுபட வேண்டும். -ஸ்ரீ ராம கீதை

"மனதை அடக்கி உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, வேதம் ஓதுவதற்கும் வேள்வி செய்வதற்கும் சமமானது. -வேதாந்த தீபம்

"ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாப்பதும், தீயசக்திகளை நாசம் செய்வதும் கருணை எனப்படும்.  -மகான் துக்காராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT