வெள்ளிமணி

ராகு-கேது தோஷம் விலக...

23rd Oct 2020 04:35 PM | -ஆர்.வி.

ADVERTISEMENT

 

வாணியம்பாடியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது உதயேந்திரம் சுந்தரராஜப் பெருமாள் கோயில். பெருமாள் கர்ப்பகிரகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதை வேறு எங்கும் காணமுடியாது. ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

சுருட்டப்பள்ளி பள்ளி கொண்ட ஈஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவியுடன் காட்சி தருவதும் அபூர்வ அமைப்பு. பரமேஸ்வரன் இத்தலத்தில் பார்வதிதேவி மடிமீது தலைவைத்து பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். திருமணத்தடை விலக இங்குள்ள தட்சிணாமூர்த்தி சுவாமியை வழிபட்டு பயனடைகிறார்கள். 
சென்னை-திருப்பதி சாலையில் திருவள்ளூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம்-தேவதானப்பட்டியில் அமைந்துள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் மூல ஸ்தானத்தில் காமாட்சியம்மன் சந்நிதி பூட்டப்பட்டுள்ளது. "அவள் பூட்டிய கதவுக்குப் பின்னால் இருந்தாலும் பக்தர்களின் இதயக் கதவைத் திறந்து அங்கிருக்கும் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறாள்' என்று அனைவரும் சொல்கிறார்கள். அடைத்த கதவுக்கு முன்னால் நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு நடைபெறுகிறது. இந்த அம்மனை வழிபட்டால் திருமணத் தடை விலகும் என்பது ஐதீகம்.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சக்தி வாய்ந்த திருத்தலம். ஒரு புற்றாக பெண் உருவத்துடன் கர்ப்பிணிப் பெண்ணாக மல்லாந்து படுத்து இருப்பதைப் போல் காட்சி அளிக்கிறார். அம்மனின் சந்நிதியில் காலடி பதித்தார் மனக்குறையும், தடைகளும் விலகும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவை இருந்த இடம் தெரியாமல் விலகிப் போகும் என்கிறார்கள். திருமண யோகம், மழலைப் பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT