வெள்ளிமணி

வியாழ வட்ட விநோதம்

20th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

 

குரு பகவானுக்கு தன காரகம், புத்திர காரகம் ஆகிய இரண்டு காரகங்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில காரகத்துவங்களும் உள்ளன. அவைகளில் சிலவற்றைக் கீழே காணலாம். 

தனம், புத்திரம், ஞானம், யோகாப்பியாசம், ஆச்சாரியத்துவம், குரு பீடம், ஆச்சார அனுஷ்டானம், அஷ்டமாசித்து, உபதேசம், யுக்தி, விவகார ஆலோசனை, சுருதி, ஸ்மிருதி, சத்விஷயம், சாந்தம், செüபாக்கியம், தங்கம், புஷ்பம், இனிப்பு, சன்னியாசம், தேன், கடலை, சீரகம் என்பனவாகும்.

ரிஷப ராசியில் குரு பகவான் ஜனன காலத்திலிருந்தால், மந்திரி பதவி வகிக்கும் திறமையை ஏற்படுத்தும். 

ADVERTISEMENT

சிம்ம ராசியில் குரு பகவான் இருந்தால் சேனைத் தலைவர்களாகவும், பிரதானிகளாகவும் இருப்பர். 

தனுசு ராசியில் குருபகவான் இருந்தால் சகல துறைகளிலும் முடிசூடா மன்னர்களாகத் திகழ்வர். கும்ப ராசியில் குரு பகவான் இருந்தால் மகா புத்திசாலி. மௌனமாகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். உலகப் புகழும் ஏற்படுகிறது. குரு பகவான் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகளில் இருந்தால் மேற்கூறிய வகையில் சிறப்பான பலன்கள் உண்டாவதை "குரு வட்டம்' அல்லது "குரு வளையம்' என்று கூறுவார்கள்.

ஆலய கும்பாபிஷேகம் செய்யும் யோகம்

குரு பகவானைப் பற்றிச் சொல்லும்பொழுது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வாசகர்களுக்கு கூற வேண்டும். 

செல்வம் படைத்தவர்கள், ஆஸ்திகர்கள் கோயில்களைக் கட்ட முடியும். ஆனால் அந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய இவர்களால் முடியாது. 

குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலாவது அல்லது பாக்கிய ஸ்தானத்திலாவது இருக்க வேண்டும்; அல்லது ஐந்தாம் இடத்தையாவது அல்லது ஒன்பதாம் இடத்தையாவது குரு பகவான் பார்க்கவேண்டும். 

இப்படிப்பட்டவர்கள்தான் கும்பாபிஷேகம் செய்ய முடியும்.

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT