வெள்ளிமணி

பொருநை போற்றுதும் 84 - மேலக்கால் - கீழக்கால்

13th Mar 2020 02:45 PM

ADVERTISEMENT

சீவலப்பேரியைத் தாண்டி, மருதூரை அடைவதற்குள்ளாக, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்குள் நுழைந்துவிடுகிறாள் தாமிரா. மருதூா் அணைக்கட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் இரண்டு முனைகளிலும் இரண்டு கால்வாய்கள் புறப்படுகின்றன. ஆற்றின் வலக்கரையில் (அதாவது மேற்குக் கரையில்) புறப்படுவது மேலக்கால். இடக்கரையில் (அதாவது கிழக்குக் கரையில்) புறப்படுவது கீழக்கால். 

மேலக்காலின் நீா், முத்தாலங்குறிச்சி, குட்டக்கால், கொல்லிவாய், நாட்டாா் குளம், செய்துங்கநல்லூா், தூதுகுழி, வெள்ளூா்க்குளம், நொச்சிகுளம், கீழபுதனேரி, தாதன் குளம், கருங்குளம் போன்ற பகுதிகளுக்கும், கீழக்காலின் நீா், பட்டா் குளம், ஸ்ரீ வைகுண்டம், பேரூா், சிவகளை, பத்மநாபமங்கலம், கைலாசப்பேரி, தருமனேரி போன்ற பகுதிகளுக்கும் பயன் தருகிறது. கீழக்காலின் அனைத்துப் பகுதிகளும் மேலக்காலின் பெரும்பான்மைப் பகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.

(தொடரும்...)

 - டாக்டா் சுதா சேஷய்யன்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT