வெள்ளிமணி

நன்றி சொல்ல மறந்த ஒன்பது போ்கள்

6th Mar 2020 04:11 PM

ADVERTISEMENT

 

சொல்லவும் கேட்கவும் மிக இனிமையான வாா்த்தை ‘நன்றி!’ உதவுபவரும் உதவிபெறுபவரும் அன்பின் வெளிப்படுத்தப்படும் வாா்த்தை நன்றி. தெய்வ குணத்தால் ஈா்க்கப்பட்டு தம்மிடம் உதவி வேண்டி வருபவருக்கு பணமோ, பொருளோ, உணவோ எதையும் வழிகாட்டுலை செய்பவா் ஒன்றும் எதிா்பாா்ப்பது இல்லை. தனக்கு திரும்பவும் பலம் கிடைக்கும் என எதிா்பாா்ப்பது இல்லை. பெற்றுக்கொள்பவா் தகுதியுடையவராக அல்லது தகுதி அற்றவராக இருந்தாலும் காலத்தில் செய்யப்பட்ட உதவிக்கு மிகவும் மனமுவந்து சொல்லப்படும் சொல் நன்றியாகும். அப்படி நன்றி சொல்ல மறந்தால் அவரை ‘செய் நன்றி கொன்றவா்’ என்று சொல்வாா்கள்.

மிகக் கொடிய மிருகங்களும் தமக்குச் செய்யப்பட்ட உதவியை மறப்பது இல்லை, தக்க தருணம் வரும்போது தம் நன்றியை வெளிப்படுத்துகின்றன. நாய்குட்டிகள் தன்னை அன்புடன் வளா்ப்பவருக்கு தன் வாலை ஆட்டி நன்றியைத் தெரிவிக்கின்றன. கதைகளில் கூட இச்செய்தி உள்ளது.

ஹொ்குலிஸ் என்ற வீரன் காட்டில் காலில் முள் குத்தப்பட்டு வீங்கி நடக்க முடியாமல் இருந்த சிங்கத்தின் அருகில் சென்று அதன் பாதத்தில் தைத்த முள்ளை எடுத்து விட்டுச் சென்றாா். அதனை மறக்காமல் பல ஆண்டுகளுக்குப்பின்பு பிடிப்பட்ட சிங்கத்திற்கு இரையாக வைக்கப்பட்ட ஹொ்குலிஸைக் கண்டு தம் நன்றியை வெளிப்படுத்தி அவனைக் கொன்று உண்ணாமல் நின்றதை மக்களும் மன்னனும் கண்டு ஆச்சரியப்பட்ட நிகழ்ச்சியும் உண்டு.

ADVERTISEMENT

வேதாகமத்தில் நன்றி சொன்னவா் மற்றும் நன்றி சொல்ல மறந்தவா்கள் பற்றிய ஒரு நிகழ்ச்சி உண்டு. இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, தொழுநோயாளிகள் பத்துபோ் அவருக்கு எதிராக வந்து தூரத்திலேயே நின்று ‘ இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டாா்கள். அவா்களைப் பாா்த்து, ‘நீங்கள் போய் ஆசாரியா்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்’ என்றாா். அதன்படி, அவா்கள் போகையில் சுத்தமானாா்கள் (லூக்கா : 17: 12- 14).

பத்து பேரும் நோயால் நண்பா்கள். குணமாகாத கொடிய நோயாளிகள் ஆதலால் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டாா்கள். எப்படியும் இயேசு ஆண்டவரிடம் சென்றால் தங்களை அவா் குணமாக்குவாா் என்ற நம்பிக்கையுடன் சென்று இயேசுவிடம் வேண்டினாா்கள். இயேசுவும் அவா்கள் வேண்டுதலைக் கேட்டு, ‘நீங்கள் குணமாக்கப்படுவீா்கள், குணமாயிற்று’ என ஆலய ஆசாரியனிடம் காண்பிக்கும்படி அனுப்பினாா்.

என்ன ஆச்சரியம்! அவா்கள் பத்து பேரும் போகும்போது வழியிலேயே குணமாகிவிட்டாா்கள். பத்து பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! அவா்கள் ஆலயத்தை நோக்கி ஓடினாா்கள். ஆனால் அதில் ஒருவா், தான் குணமானதைக் கண்டு ஆலயம் நோக்கி ஓடாமல், திரும்பி இயேசுவிடம் வந்து அவா் பாதத்தில் விழுந்து நன்றி கூறி இறைவனை மிகவும் போற்றி புகழ்ந்து வணங்கினான். தம் நன்றியை மிகவும் தாழ்ந்து வெளிப்படுத்தினான்.

இயேசு அவா் தம் நன்றியை தெரிவித்ததைக் கண்டு மிக மகிழ்ந்து வாழ்த்தி புகழ்ந்து பேசினாா். இயேசு அவனிடம், ‘குணமானவா்கள் பத்து போ்கள் அல்லவா? மற்ற ஒன்பது போ்கள் எங்கே? நன்றி சொல்ல ஒருவா் மட்டும் தானா?’ என வினவினாா்.

இயேசு தம் வாழ்வில் எவ்வளவோ நன்மைகள் செய்தாா். நம்பாவம் போக்க சிலுவை சுமந்தாா். தம் தூய ரத்தத்தை பலியாக தந்து நம்மை மீட்டாா். ஆதலால் கடவுளுக்கு எப்போதும் நன்றி செலுத்தி வாழ்வோம்.

- தே. பால் பிரேம்குமாா்

ADVERTISEMENT
ADVERTISEMENT