வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுவாமி கமலாத்மானந்தர்

நன்றி மறவாதவன், துரோகம் செய்யாதவன், மேதாவி, தூய்மையானவன், பிறர் குற்றம் காணாதவன், சாது சேவை செய்வதில் தேர்ந்தவன், செல்வம் மற்றும் கல்வியைத் தானம் அளிப்பவன் இத்தகைய தகுதிகளைப் பெற்ற ஒருவன்தான் வேதங்களைக் கற்பதற்குத் தகுதியுடையவன்.

-யாக்ஞவல்க்ய ஸ்மிருதி

முருகப் பெருமானே! நான் எப்போதும் துக்கங்களாகிய பளுவினால் அமுங்கித் தளர்கிறேன். நீயே தீனபந்துவாயிருக்கிறாய்! ஆகவே உன்னைத் தவிர நான் வேறு யாரிடமும் போய் யாசிக்கமாட்டேன். உன் மீது நான் பக்தி செலுத்தும்போது, எப்போதும் தடைப்படுத்திக் கெடுக்கின்ற அந்தத் தீய துக்கங்களாகிய நோயை அழித்துவிடு!

-சுப்ரமண்ய புஜங்கம், 24.

தற்பெருமைக்காரன் பணக்காரனாக இருந்தால், அவனுடைய தற்பெருமை வளர்ந்துகொண்டே போகும். அப்போது அவன், "தான் பேசுவது என்ன?' என்று கவனிக்காமலேயே பேசுவான். அதனால் அகங்காரமும் ஏற்படும். இவனையெல்லாம் கடவுள் செல்வத்தைக் கொடுத்தே சோதிப்பார். அதனால், அதிலிருந்து மீளவேண்டும். அதுவே தர்மமாகும்.

-இந்து தர்ம சாஸ்திரம்

"கடவுள் படைப்பில் அற்பமானது' என்று அலட்சியப்படுத்துவதற்கு ஒன்றுமே இல்லை. சூரியனிடமும், நெருப்புப் பொறியிலும் ஒரே மாதிரியான வெப்பம் இருக்கிறது. ஒரு சிறிய நெருப்புத் துளியும் எரிக்கும் தன்மை உடையது. அதுபோல் மனிதனுடைய ஒரு சிறிய செயலில் தோன்றும் குற்றம்கூட, அவனை "குற்றமுள்ளவன்' என்று படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களின் ஒவ்வொரு சிறிய செயலும் உள்ளத்தைப் பிரதிபலிப்பதால், உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

-தாயுமானவர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT