வெள்ளிமணி

பொன்மொழிகள்!

21st Aug 2020 06:00 AM | சுவாமி கமலாத்மானந்தர்

ADVERTISEMENT

 

என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம். 

தன்னுடைய அம்சத்தால் உடல் எடுத்தவர்கள் எல்லோருடைய மனங்களிலும் பகவான் இருக்கிறார். அந்தப் பெரியவராகிய பகவானுக்கு நமஸ்காரம். 

 -ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திரன்

ADVERTISEMENT

 

சுவையான உணவு படைப்பதற்கு அன்புள்ள தாய் இருக்க வேண்டும்;   ஒழுக்கமுள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும்; நல்ல அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும், சிறந்த ஆசான் இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை பிறப்பதற்கு, இறைவன் மீது பக்தி இருக்க வேண்டும்.

-உபநிஷதம்

 

பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக இருக்கிறது. அது போலவே ஞானிகள் பலவகைப்பட்ட சரீரங்களில் உள்ள ஜீவன்களை ஒரே அறிவுமயமானவர்களாகக் காண்கிறார்கள்.

-பிரம்மபிந்து உபநிஷதம்

 

ஆத்மசுத்தியாகிய தொழிலைச் செய்யுங்கள். அதில் எப்போதும் விழிப்போடு இருங்கள்; அதே சிந்தனையுடன் இருங்கள்; முக்தி பெறுவதிலேயே கருத்துச் செலுத்துங்கள்.  

-மகா பரிநிர்வாண சூக்தம்

Tags : வெள்ளிமணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT