பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

சுகபோகங்களை விரும்பும் மனம்தான் பந்தம் என்ற கட்டு; அவற்றைத் துறக்கும் மனம்தான் மோட்சம் எனப்படுகிறது. மனமே உலகை உருவாக்குகிறது. 
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

* சுகபோகங்களை விரும்பும் மனம்தான் பந்தம் என்ற கட்டு; அவற்றைத் துறக்கும் மனம்தான் மோட்சம் எனப்படுகிறது. மனமே உலகை உருவாக்குகிறது. 
- யோக வாசிட்டம் 
* கங்கை போன்ற புனித நதிகளால் மனிதனின் பாவங்கள் கரைவது போல, அன்பைக் கையாளுபவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். 
- ஞானதேவர்
* எல்லா மக்களும் இணக்கமாய் வாழ்ந்து வருவார்களாக. எல்லோரும் அன்புடன் உரையாடட்டும்.
* அனைவர் உள்ளங்களிலும் ஒற்றுமை உணர்வு நிலவட்டும். எல்லோரும் பகையை வளர்க்காத அறிவைப் பெறட்டும்.
* மூதறிஞர்களான பெரியோர்கள் எந்தக் காலத்திலும் இறைவன் அறிவு பெற்று அவரை வழிபடுவதிலேயே தங்கள் காலத்தைக் கழித்ததுபோல, நீங்களும் நல்லறிவு பெற்று இறைவன் வழிபாட்டில் முனைந்திருங்கள்.
* உங்கள் அனைவரின் சங்கல்பமும் ஒன்றுபோல் அமையட்டும்; நீங்கள் கொள்ளும் உறுதிகளும் ஒன்றுபோல் இருக்கட்டும். உங்கள் நோக்கங்களும் ஒன்றுபோல் அமையட்டும். உங்கள் அனைவர் உள்ளங்களிலும் ஒரே வகையான உயர்ந்த மனநிலை இருந்து வரட்டும். நீங்கள் எல்லோரும் ஒருவர் மற்றவருக்கு உதவிக்கொண்டு தத்தம் காரியங்களைச் சிறப்பாக செய்து முடியுங்கள். 
- ரிக் வேதம் 
* தவம் மூன்று வகைப்படும். அவை மானசம், வாசிகம், காயிகம் எனப்படும். தான தர்மத்தில் எண்ணம் நாட்டல், உயிர்களிடம் அன்பு செலுத்துதல், பிறர் செய்த தீமை பொறுத்தல், உண்மை பேசுதல், மெளனத்தில் அமர்ந்து சிவத்தைச் சிந்தித்தல், புலன்களை அடக்குதல் முதலியன மனதால் செய்யப்படும் மானசம் ஆகும்.
* நமசிவாய மந்திரத்தை ஜபம் செய்தல், ருத்திர மந்திரங்களை ஓதுதல், தோத்திரப் பாடல்களைப் பாடுதல், தர்மங்களை எடுத்துரைத்தல் ஆகியன வாக்கால் செய்யப்படும் வாசிகம் ஆகும்.
* சிவபெருமானைப் பூஜித்தல், திருக்கோயிலை வலம் வருதல், இறைவன் சந்நிதிக்குச் சென்று வணங்குதல், பல திருத்தலங்களுக்கும் சென்று வருதல், கங்கை முதலிய தூரத்தில் இருக்கும் புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடுதல் என்பன உடம்பால் செய்யப்படும் காயிகம் ஆகும்.
- திருவிளையாடல் புராணம்
* உன் மனம் தூயதாக இருந்தால் உன் பகைவர்கள்கூட உன் நண்பர்களாவார்கள்; கொடிய உயிரினங்களால் உனக்கு ஆபத்து இல்லை, நஞ்சும் அமிர்தமாகும்.
- துக்காராம்
* நான் என்னை குருவிடம் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அர்ப்பணித்துக்கொண்டேன். அவர் மனிதர்களைத் தெய்வமாக்குகிறார்.
- குருநானக்
* தேவி! உனது பாதங்களை அடைக்கலமாக அடையும் மனிதன் எந்தவித ஆபத்துக்கும் உட்படுவதில்லை. ஆனால், தானே பிறருக்கோர் அடைக்கப் பொருளாகவும்கூட ஆகிவிடுகின்றன.
- தேவி மாகாத்மியம்
* ஒரே விஷயமானது, மனதில் ஒரு சமயத்தில் சுகமாகவும் மற்றொரு சமயத்தில் துக்கமாகவும் கொள்கிறது. ஒருவனுக்குச் சுகமாயிருப்பது மற்றொருவனுக்கு துக்கமாயிருக்கிறது. ஆகையால் சுகமும் துக்கமும் விஷயத்தில் இல்லை; மனதில்தான் இருக்கிறது. ஆத்மா எப்போதும் ஆனந்தமாக இருக்கிறது.
- விவேகசூடாமணி
* எங்களை இன்னல்கள் பலவற்றிற்கு உள்ளாக்கி எங்கள் உள்ளத்தைத் தூய்மையாக்கும் தெய்வமே, இன்று தானமளிக்க விரும்பாதவன் மனமும் தானம் அளிக்க முன்வருமாறு செய். கஞ்சன் மனதையும் இளக்கு; அவனையும் கொடுத்து உவக்கச் செய்.
- ரிக் வேதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com