பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே! தாமரையைக் கையில் உடையவளே! அதிக வெண்மையான ஆடை சந்தனம் மாலை இவற்றால் விளங்குபவளே! மகிமை வாய்ந்தவளே!
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• நல்லவர் நட்பு நாள்தோறும் வளர்ந்து நன்றாகும். தீயவர் நட்பு அங்ஙனம் ஆகாது.
- நன்னெறி
• எல்லா உயிர்களும் என்னை நண்பனாகக் கருதட்டும், நானும் எல்லா உயிர்களையும் என் நண்பனாகவே கருதுவேனாக!
- யஜுர்வேதம்
• தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே! தாமரையைக் கையில் உடையவளே! அதிக வெண்மையான ஆடை சந்தனம் மாலை இவற்றால் விளங்குபவளே! மகிமை வாய்ந்தவளே! மகாவிஷ்ணுவின் பிரிய நாயகியே! மனதைக் களிக்கச் செய்பவளே! மூவுலகத்திற்கும் செல்வத்தைக் கொடுப்பவளே! மகாலட்சுமியே! என்னிடம் கருணை செய்.
- கனகதாரா ஸ்தோத்ரம் 
• கடமையின் நெறியைக் கடைப்பிடி. உன் உடன் பிறந்தவர்களிடம் அன்பு செலுத்து. அவர்களைத் துயரத்திலிருந்தும் விடுவிக்க முயற்சி செய்.
- புத்தர்
• பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசுவை அடிக்காதே; வெள்ளாட்டையோ, செம்மறியாட்டையோ இம்சை செய்யாதே; வதைக்காதே. இரண்டு கால்கள் உள்ள மனிதர்களையும், பறவைகள் முதலியவற்றையும் துன்புறுத்தாதே. குதிரை, கழுதை முதலிய பிராணிகளைக் கொல்லாதே. எந்த உயிருக்கும் இம்சை புரியாதே.
- யஜுர் வேதம்
• இந்த உலகத்தில் சோம்பல் என்ற ஒரு பாவி மட்டும் கெடுக்காவிட்டால், எந்த மனிதனால்தான் தனவந்தனாக ஆக முடியாது? எவன்தான் வித்துவானாக ஆகமாட்டான்? சோம்பல் என்ற ஒன்று இருப்பதனாலேயே கடல் வரையில் பரந்துள்ள இந்தப் பூவுலகில் ஏழைகளும் அறிவிலிகளும் மலிந்திருக்கிறார்கள்.
- யோக வாசிட்டம் 
• பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, நல்ல ஆபரணம் ஒன்று உண்டென்றால் அது சகிப்புத்தன்மைதான். சகிப்பே தானம்; சகிப்பே சத்தியம்; சகிப்பே யக்ஞம்; சகிப்பே கீர்த்தி; சகிப்பே தர்மம். இந்த உலகம் முழுவதையும் சகிப்பே வளைத்துக்கொண்டிருக்கிறது.
- வால்மீகி ராமாயணம்
• பொறாமை என்னும் உணர்வை எவன் ஒருவன் தன் மனதிலிருந்து அடியோடு களைத்துவிடுகிறானோ, அவன் காலம் முழுவதும் மனஅமைதியுடன் வாழ்வான்.
- புத்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com