புதுக்கோட்டையில் அருளும் புண்ணிய மூர்த்தி!

நாம சங்கீர்த்தனத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபடச்செய்தவர் புதுக்கோட்டை பூஜ்யஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர். அவரை "அப்பா' என்று அன்போடு அழைக்கிறார்கள்
புதுக்கோட்டையில் அருளும் புண்ணிய மூர்த்தி!

நாம சங்கீர்த்தனத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு பிறரையும் அதில் ஈடுபடச்செய்தவர் புதுக்கோட்டை பூஜ்யஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர். அவரை "அப்பா' என்று அன்போடு அழைக்கிறார்கள் அவருடைய பக்தர்கள். நாம சங்கீர்த்தனம் இந்தத் தலைமுறையில் பிரபலமாகி ஆலமரமாகப் பெருகியதற்கு புதுக்கோட்டை அப்பா ஒரு முக்கியக் காரணம். உஞ்சவிருத்தி, பூஜை, டோலோத்சவம் உள்ளிட்ட பாகவத தர்மத்தை அன்றாடம் தவறாமல் கடைபிடித்த அருளாளர். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மத்தை தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தார் பாகவதர். 
1920 - ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி உத்சவத்தைக் கொண்டாடும் சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார். தான் ஆராதிக்க நரசிம்ம விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தார். 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த உத்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பாகவதர்கள் கலந்து கொள்வார்கள். அவருக்கு பின் அவரது சந்ததியர்கள் அவர் ஏற்படுத்திக் கொடுத்த வழியிலேயே இந்த பகவத் கைங்கர்யத்தை தொடர்ந்து சிறப்புற நடத்துகின்றார்கள்.
இவ்வாண்டு, ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் 100 -ஆவது வருட விழாவாக மே 17 -இல் தொடங்கி மே 26 வரை புதுக்கோட்டை டவுன் கிழக்கு 3 -ஆம் வீதியில் உள்ள ஜி.ஏ.டிரஸ்ட் (G.A Trust) கோபாலகிருஷ்ண பாகவத ஸ்வாமி நாமசங்கீர்த்தன மண்டபத்தில் விமரிசையாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள் மே 17 -ஆம் தேதி பிராண பிரதிஷ்டை பூஜை, அபிஷேகம், ஆராதனையுடன் துவங்குகிறது. 
மேற்படி நாட்களில், தினசரி உஞ்சவிருத்தி பஜன், சம்பிரதாய பஜன், டோலோத்ஸவம், திவ்ய நாம சங்கீர்த்தனம், லட்சார்ச்சனை, சிறப்பு ஹோமங்கள் போன்றவை நடைபெற்று, மே 23 - சீதாகல்யாண உற்சவமும், மே 25, 26 -அகண்ட ராம நாம ஜபத்துடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு அம்சமாக மே 26 - 108 பாகவதர்கள் கலந்து கொள்ளும் பாகவத பூஜை வைபவமும் நடைபெறுகின்றது. 
பக்தர்கள் இந்த உத்சவங்களில் பங்கேற்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மரின் பரிபூர்ண அனுக்கிரகத்திற்கு பாத்திராகலாம். 
தொடர்புக்கு: 96639 33599 / 94865 42444.
- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com