22 செப்டம்பர் 2019

நிகழ்வுகள்

DIN | Published: 17th May 2019 02:05 PM

மகா கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தச்சங்குறிச்சி கிராமம், ஸ்ரீ மகாலட்சுமி கோயிலின் உபகோயிலான ஸ்ரீ தொட்டிலியம்மன் கோயிலுக்கு 23.05.2019, காலை 9.00 மணி - 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94437 67645/ 97512 11294.
•••••••••••••••
நரசிம்மர் ஜெயந்தி
சென்னை, முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலை, 1- ஆவது பிளாக்கில் அமைந்துள்ள பூலோக வைகுந்த கைலாயத்தில் 17.05.2019 அன்று விசேஷஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகளுடன் நரசிம்மர் ஜெயந்தி வைபவம் நடைபெறும்.
தொடர்புக்கு: 044 - 26536606
பிள்ளையார்பட்டி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 17.05.2019 அன்று சிறப்பு வேள்வி அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 096598 68108.
•••••••••••••••••
சதுர்வேத ஸர்வ ஸம்மேளனம்
சென்னை, அம்பத்தூர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அனுக்ரஹா டிரஸ்டின் 6- ஆம் ஆண்டு, சதுர்வேத ஸர்வ சாகா ஸம்மேளனம், ஸ்ரீ வித்யா நவசண்டி மகா யக்ஞம் நடைபெற்று வருகின்றது. 17.05.2019 - ஸ்ரீ வித்யா நவாவரண ஹோமம், ஸ்ரீ சாந்தி துர்க்கா மந்திர ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் மற்றும் நீல சரஸ்வதி மந்த்ர ஹோமம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94442 07063.
•••••••••••••••••••
உழவாரப்பணி
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆசியுடன் உழவார படையாளிகளின் சீரிய முயற்சியுடன்158- ஆவது உழவாரத் திருப்பணி 19.05.2019 -ஆம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கோவிலம்பாக்கம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அருள்மிகு ஏகாம்பரேசுவரர் ஆலயத்தில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 99404 32147/ 97907 19151.
••••••••••••••••••
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கல்யாண விழா
திருநல்லூர்ப் பெருமணம், ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் நல்லூரில் திருஞான சம்பந்தர் ஜோதியில் கலந்த தினமான வைகாசி, மூல நட்சத்திரத்தன்று மே 21 -ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகள்: காலை 10.30 மணிக்கு பால சம்பந்தருக்கு உபநயனம், மாலை 5 மணிக்கு திருமுறைகள் திருவீதி உலா. இரவு 9 மணிக்கு - திருஞானசம்பந்தர் திருக்கல்யான உத்சவம். தொடர்ந்து திருமண கோலத்துடன் வீதியுலா. மே 22 - அதிகாலை 4.30 மணிக்கு மூல நட்சத்திரத்தில் சிவஜோதி தரிசன ஐக்கியம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: சிவ.கருப்பையா-96888 93953.
••••••••••••••••••
பாம்பன் சுவாமிகள் குருபூஜை
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகளின் சமாதி திருக்கோயிலில் மே 24 - வெள்ளிக்கிழமையன்று பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெறுகின்றது. இந்த சமாதி கோயில் திருவான்மியூரில் கலா திக்ஷத்ராபள்ளி வளாகத்தை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
•••••••••••••••••••
வைகாசி விசாகத்திருவிழா
சென்னை, தரமணி ராஜாஜி தெருவில், தரமணி இந்து சமாஜத்தின் சார்பில் மே 18 -ஆம் தேதி வைகாசி விசாகத்தன்று ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, திருவீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நலம் தரும் அஸ்திர ஹோமம் - சோடச லட்சுமி யாகம்
பொருநை போற்றுதும்! 59
கொன்றைப்பூ விசேஷம்!
மண்ணில் தோன்றிய மாலோலன்!
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 26