செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

நிகழ்வுகள்

Published: 07th June 2019 12:00 AM

இரு கும்பாபிஷேக வைபவங்கள்

வேலூர் மாவட்டம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஜூன் 14 -ஆம் தேதி,  இரு கும்பாபிஷேக வைபவங்கள் நடைபெறுகின்றன.

1. ஸ்ரீ லஷ்மி வராக சுவாமி

வித்தியாசமான முறையில் வட்டவடிவில் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் எம்பெருமான் ஸ்ரீ லஷ்மிவராக மூர்த்தியாக அருள்புரிகின்றார். வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ராகு தோஷங்கள் நீங்கவும், திருமணம் கை கூடவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் இந்த லஷ்மி வராகர்.

2. பாதாள சொர்ண சனீஸ்வரர்

இந்த பீடத்தில் ஈசான்ய மூலையில் 13 படிகள் கொண்ட பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் சந்நிதி ஒரு தனி ஆலயமாக அமைந்துள்ளது. மூலவரின் கீழ் பிரதிஷ்டையாக உள்ள சனிபகவான் யந்திரம் மிகவும் ஆகர்ஷணம் பொருந்தியுள்ளது. வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனைகள் விரைவில் நடைபெற வேண்டி நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயங்களுக்கு இந்த யந்திரத்தை எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார் தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர சுவாமிகள். இந்த தன்வந்திரி ஷேத்திரத்தில் அமைய உள்ள சொர்ண சனீஸ்வரர் சந்நிதியில் 27 நட்சத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். 
தொடர்புக்கு: 9443330203 / 04172 - 230033.


மகா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம், அன்னவல்லி கிராமத்தில் ஸ்ரீ சர்வசக்தி சாய்பாபா ஆலயத்தில் சாய்பாபா உருவசிலை அமைத்தல், பிராண பிரதிஷ்டை போன்ற திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதுடன், அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 13.06.2019 அன்று நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 73387 70892/ 75502 86121.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு (வடசென்னை) கிராமத்தில் உள்ள காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 14 -ஆம் தேதி நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 98408 21013.

நாகை மாவட்டத்தில் தெற்காலத்தூரில் உள்ளது அருள்மிகு சாந்த நாயகி, அம்பிகை சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம். சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. நாகதேவதைகள் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலவரலாறு தெரிவிக்கின்றது. இவ்வாலய  மகாகும்பாபிஷேகம் ஜூன் 20 -ஆம் தேதி, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது.


ராஜகோபுர கும்பாபிஷேகம்

தென்காளகஸ்தி என்னும் இராஜபதி அருள்மிகு ஸ்ரீ சௌந்திர நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் (திருச்செந்தூர் அருகில் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் உள்ளது) ஜூன் 14 -ஆம் தேதி நூதன ராஜகோபுர மகாகும்பாபிஷேகம் மற்றும் சகஸ்ர கலாபிஷேகம் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் ஜூன் 10 - இல் ஆரம்பமாகிறது. இத்தலம் கேது வணங்கிய நவகைலாயத்தில் எட்டாவது தலமாகும். 
தொடர்புக்கு: 98422 63681.


மஹா சம்ப்ரோக்ஷண விழா

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா உபயவேதாந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பெருந்தேவித் தாயார், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மஹாசம்ப்ரோக்ஷண விழா ஜூன் 13 காலை 10.30 மணி அளவில் நடைபெறுகின்றது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜூன் 9 -இல் தொடங்குகின்றது.
தொடர்புக்கு: 94455 38812.


திருமஞ்சன திருக்கல்யாண மகோத்சவம்

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீநிவாஸ நிகேதனம் என்ற ஆன்மீக அமைப்பின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு ஜூன் 11 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை தியாகராயநகர். ஜி. என். செட்டி தெருவில் உள்ள ஆனந்தவல்லி கல்யாண மண்டபத்தில் தவத்திரு சீதாராம சுவாமிகள் முன்னிலையில் திருமஞ்சனம், ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண உத்சவம் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றது. நேரம் : காலை 7.30 முதல் மதியம் 12 வரை.  
தொடர்புக்கு :  93810 77297 / 044-28174179. 


சேக்கிழார் பெருமான் விழா

குன்றத்தூர் திருநாகேச்சுரம் அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை ஸ்ரீ நாகேஸ்வரப்பெருமான் திருக்கோயிலில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தெய்வ சேக்கிழார் பெருமானுக்கு ஜூன்  7 -ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் திருமுழுக்கும், திருவீதிப் பெருவிழாவும் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிகள் அன்று காலை 10.00 மணிக்கு அபிஷேக, அலங்காரம் முடிந்தவுடன் அலங்காரத்துடன் ஸ்ரீ சேக்கிழார் பெருமான் உற்சவ மூர்த்தி தேரடிக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு மறுநாள் சனிக்கிழமை வரை பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெறுகின்றது.


திருப்பணி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீலட்சுமி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகளில் பக்தர்கள் பங்கு கொண்டு பெருமாளின் பேரருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 86102 82880.


ஆனி பிரம்மோத்சவம்

திருவள்ளூர் மாவட்டம்,  நரசிங்கபுரம் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவம் ஜூன் 24 முதல் ஜூலை 5 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. முக்கிய விழாநாள்கள்: ஜூன் 27 - கருடசேவை. ஜூலை 1- திருத்தேர், ஜூலை 3 - தீர்த்தவாரி. ஜூலை 5 - விடையாற்றி திருமஞ்சனம். விழா நாள்களில் காலையில் உற்சவர் திருமஞ்சனமும் மாலையில் பக்தி உலாத்தல், ஆண்டாள் சந்நிதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறும். இத்திருத்தலம் செல்வதற்கு பூந்தமல்லியிலிருந்து மாநகரப் பேருந்து எண்: 591இ இயக்கப்படுகிறது.  
தொடர்புக்கு: 94425 85638.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

முன்னோரை மகிழ்ச்சிப் படுத்தும் ராமர் கயை!
மறந்ததை மஹாளயத்தில் செய்!
பொருநை போற்றுதும்!58 - டாக்டர் சுதா சேஷய்யன்
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 25
மன்னிப்பதில் மகத்தானவன் அல்லாஹ்