வெள்ளிமணி

நிகழ்வுகள்

30th Aug 2019 10:50 AM

ADVERTISEMENT

பிரம்மோற்சவம்
 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குரோம்பேட்டை ஸ்ரீ விநாயகா குழுமம் நடத்தும் 13-ஆம் ஆண்டு விநாயகர் கண்காட்சி விழா, சென்னை - 64, சிட்லபாக்கம், காந்தி தெருவில், முத்தாலம்மன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ராம கணேஷ் மஹாலில் செப்டம்பர் 1 -இல் தொடங்கி 9 வரை நடைபெறுகின்றது. இவ்வாண்டு விழாவிற்கு "ஸ்ரீ அத்திவரத மஹா கணபதியின் பிரம்மோற்சவம்' என்று சிறப்புடன் அழைக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அத்தி மரத்தினால் செய்யப்பட்ட சுமார் 8 அடி உயர, மற்றும் நீளத்தில் மஹா கணபதியின் நின்ற திருக்கோலம், சயனத்திருக்கோலம், பல்லாயிரக்கணக்கில் பிள்ளையாரின் திருவுருவங்கள், சிலா ரூபங்கள், படங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களில் தரிசிக்கலாம். அனுமதி இலவசம்: நேரம் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
 தொடர்புக்கு: 93810 41018 / 76670 01144.
 தஞ்சை மாவட்டம், திருவையாறு மேட்டுத்தெரு, ஸ்ரீ அப்பர்சுவாமிகள் எழுந்தருளிய சமுத்திர தீர்த்தக்கரை ஸ்ரீ அபீஷ்டவரத மஹாகணபதி ஆலய வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 2 -இல் தொடங்கி செப்டம்பர் 13 வரை நடைபெறுகின்றது. உற்சவ காலங்களில் காலை 8 மணிக்கும். இரவு 8 மணிக்கும் (விசேஷ வாகனங்களில்) சுவாமி புறப்பாடு நடைபெறும்.
 தொடர்புக்கு: 94435 61685.
 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி பெருவிழா
 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சருகணி சாலை, உடையார் குடியிருப்பு திருமணவயல் ஸ்ரீ மஹாகணபதி ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 2-ஆம் தேதி சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடும்; செப்டம்பர் 3 -ஆம் தேதி சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 94894 91371 / 89030 81371.
பக்தித்திருவிழா
 ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அருகில் உள்ள திருவோணமங்கலம் - ஞானபுரி ஸ்ரீ சித்ர கூட திருத்தலத்தில் செப்டம்பர் 7- ஆம் தேதி, குடும்ப நலப்பிரார்த்தனை செய்து, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்) மீண்டும் காவிரி நதிநீர் நிறைந்து பாய்ந்து ஓடி விவசாயம் செழிக்கவும், ஞானபுரியில் நடைபெற்று வரும் பெரிய ஆஞ்சநேயர் கோயில் திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற வேண்டியும் 1008 பக்தர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனை வழிபாடு செய்கிறார்கள். இதற்கான பெரு முயற்சியில் திருவாரூர் மாவட்ட தர்ம ரக்ஷண சமிதி இணைந்துள்ளது. தற்போது ஞானபுரியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் பதரீ சங்கராச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாசுவாமிகளின் குருவருளும் பெற பக்தர்கள்
 அழைக்கப்படுகின்றார்கள்.
 தொடர்புக்கு: இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்
 - 94869 65655.
மகாகும்பாபிஷேகம்
 செங்கல்பட்டு - வாலாஜாபாத் செல்லும் வழியில் பாலூருக்கு அடுத்த கொங்கணஞ்சேரிக்கு அருகில் கொளத்தாஞ்சேரி கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ நேத்திரமுடையார் ஈஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98847 85289 / 94442 66007.
 தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ ராமாஞ்சநேயர் திருக்கோயிலில் செப் 1- ஆம் தேதி (நேரம்: காலை 9 மணி) அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷணமும்; இதே வளாகத்தில் உள்ள ஸ்ரீ வைத்தியநாதஸ்வாமி திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகமும் - ஆக இருவைபவங்கள் நடைபெறுகின்றது. இரு கோயில்களிலும் யாகசாலை பூஜை, ஹோமங்கள் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி ஆரம்பமாகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராமாஞ்சநேய டிரஸ்ட் செய்துள்ளது.
 தொடர்புக்கு: 94451 05533.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT