அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். (பாடல்: 326)
அறிவு குறைந்திருப்போர் கூடியிருக்கும் அவையில் பங்கேற்றுச் சலசலப்பை ஏற்படுத்தி வாழும் கல்லாத ஒருவர் நல்லோர் அவையிலே நுழைந்து, நாவடக்கமும் கற்ற அறிவும் மிகுதி உடையார்தம் அறிவை இகழ்ந்து பேசுவது புழுவால் அரிக்கப் பெற்று உளுத்துப்போன காரம் இல்லாத மிளகை உண்பது போன்றதாகும்.