தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

28th May 2023 05:46 PM

ADVERTISEMENT

 

ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றியாண்டும்
பாணித்தே செய்ப, வியங்கொள்ளின்  காணி
பயவாமைச் செய்வார் ஆர்? தம் சாகாடேயும்
உயவாமைச் சேறலோ இல்.         (பாடல்: 308)


சொந்த வண்டியாக இருந்தாலும் அது ஓடுவதற்கு உரிய அச்சாணி நெய்யைப் போட்டே ஆக வேண்டும். அப்போதுதான் சக்கரங்கள் உருளும். அதுபோல எதுவும் கொடுக்காமல் கடமை உணர்வு இல்லாதவர் கையில், வேலை ஒன்றைக் கொடுத்தால், பத்து ஆண்டுகள் ஆனாலும் முடித்துத்தர மாட்டார்கள். கூலியாகச் சிறு பொருளேனும் பெறாமல், வேலை செய்து முடிக்க மாட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT