தமிழ்மணி

புறத்திரட்டு அறிவோம்

DIN

"புறத்திரட்டு' அல்லது "நீதித் திரட்டு' அல்லது "பிரசங்காபரணம்' என்பது தமிழ் திரட்டு நூல். 15-ஆம் நூற்றாண்டில் திரட்டி நூலாக்கப்பட்டது. இந்த நூலைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை 1930-ஆம் ஆண்டில் பதிப்பித்தார். இதில் 1,570 செய்யுட்கள் உள்ளன. மறைந்து போன பல நூல்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.

இதில் உள்ள பாடல்களில் பல பதினெண் கீழ்க்கணக்கு செய்யுட்களுக்குச் சிறந்த பாடமாக அமைந்ததால், உ.வே.சா. "இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்' எனக் கூறியுள்ளார்.

புறத்திரட்டில் உள்ள பாடல்களில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்துப் புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார் வையாபுரிப் பிள்ளை. புறத்திரட்டை முதன் முதலில் பதிப்பித்த வையாபுரிப் பிள்ளை, இதன் காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி எனக்குறிப்பிட்டுள்ளார்.

கேள்விப்பட்டிராத சில நூல்களை பற்றிப் புறத்திரட்டினால் அறியமுடிகிறது எனவும் "ஆசிரியமாலை' என்பது அப்படிக் கிடைத்த ஒன்று எனவும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகின்றார்.

புறத்திரட்டால் கிடைத்த மற்றொரு நூல்,"சாந்தி புராணம்' என்பது. தமிழில் தெளிந்த நீரோடை போல உள்ள அருமையான நூல்களைக் கண்டறிந்து அவற்றைப் புறத்திரட்டுக்குக் கொண்டு வந்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையே. அதனாற்றான் தமிழ்நாடெங்கும் அலைந்து திரிந்து பத்துப்பாட்டு முதலியவற்றைக் கொண்டு வந்த உ.வே.சா., தனக்குக் கண்கள் கொடுத்த நூல் என்று புறத்திரட்டைக் குறிப்பிட்டுள்ளளார்.

பழைய இலக்கியத்தில் தேர்ந்து புதிய இலக்கிய வளர்ச்சியையும் போற்றியவர் வையாபுரிப் பிள்ளை. வழக்கறிஞர் தொழிலை விட்டு தமிழ்த்தொண்டிலேயே உழைக்கலானார். தமிழில் பேரகராதி என்னும் லெக்சிகனை உருவாக்கினார். சங்க இலக்கியம் முழுமையினையும் பதிப்பித்தார். அவருடைய ஆராய்ச்சியில் கண்டவற்றை நூல்களாக எழுதியுள்ளார்.

நாமும் புறத்திரட்டு நூலைப் பயின்று தமிழின் ஆழ அகலம் அறிவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT