இடு குடைத் தேர் மன்னர், எமக்கு அமையும் என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு
முடிதல் எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்துவிடல். (பாடல்: 309)
கொற்றக்குடை நிழலில் தேரில் அமர்ந்து வரும் அரசர் தமக்கு இது மிகப் பிடிக்கும் என்று விரும்பும் அதே பொருளைத் தமக்குப் பிடிக்கும் என்று விரும்புதலும் அதை அடைய முயலுதலும் கொடிய புலியை அருகு அழைத்துக் கொள்வது போன்றது ஆகும்.
ADVERTISEMENT