ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்,
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதர் இல். (287)
அரசர் தம்மை எதிர்த்தும் நம் கீழ் வாழும் மக்களுக்குத் தீங்கு செய்தும் செயல்படும் எதிரிகளை ஒழித்தலும் ஒடுக்குதலும் வேண்டும். அவ்வாறு செயல் முடிக்காமல் யானை மேல் அம்பாரி வைத்து செல்லுதல் பெருமையாகாது; குற்றம். வானிலிருந்து விழும் நீர்த்துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடி பறவையைப் போல் ஒரு குறிக்கோளை நோக்கித் தவம் செய்பவர் கூடப் பொருந்தாதவரை இகழாமல் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள்.