தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

5th Feb 2023 05:15 PM

ADVERTISEMENT

 

வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இகழ்ந்தது இல் செல்வம் பெறுதல் - அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல்.     (பாடல்: 292)

யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டார். உரிய வலிமை இல்லாது இருப்பார். கொடிய சொற்களைப் பேசுவார். எவருக்கும் உற்ற நேரத்தில் உதவி எதுவும் செய்யார். அத்தகையோர் பெரிய அளவில் செல்வம் பெற்று இருப்பது எப்படி? அது யாரோ விதைத்து விட்டுப் போன வயல் விளைந்து இருப்பது போன்றது ஆகும். அவருடைய செல்வம் அன்று. அவர் முன்னோர் சேர்த்த செல்வம் என்பது கருத்து.

ADVERTISEMENT
ADVERTISEMENT