தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

25th Sep 2022 05:41 PM

ADVERTISEMENT

 


எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா, இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை.    (பாடல்: 273)


எண்ணுவதற்குக் குறைவுபடாத பொருட்செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் வழங்கும் மானியச் செல்வமும், அரசரால் பாராட்டப் பெறும் தகைமையும் முதன்மையானவை அல்ல. இப்பிறப்பின் செயல்களில் இருந்து தொடர்ந்து அடுத்து வரும் நல்பிறப்புகளில் செய்யும் நற்செயல்களே தலைமையானவை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT