தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

20th Nov 2022 04:53 PM

ADVERTISEMENT


பொருந்தாதவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப - அதுவே
அரிந்து அரிகால் நீர்ப் படுக்கு மாறு.      (பாடல்: 281)

பெரிய அருவி விண்ணில் இருந்து விழும் மலைநாடனே! பகைவரைப் போரிட்டு வென்றதுடன் நில்லாது தொடர்ந்து அவர்மேல் வெகுளி கொண்டு அழித்தல், நெல்லை அரிந்துவிட்டு எஞ்சி இருக்கும் அரிதாளையும் வேருடன் பிடுங்கி நீரில் புதைத்து விடுதல் போன்றது ஆகும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT