தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

19th Jun 2022 05:21 PM

ADVERTISEMENT

 


நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண்
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும்
காப்பாரிற் பார்ப்பார் மிகும். (பாடல்}259) 


வெயிலின்கண் காயவைத்த வற்றலைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இமைகொட்டும் அளவு நேரத்தினுள்ளும், தம் பார்வையிலே பட்டதென்றால் அதனைப் பறவைகள் திருடிச் சென்றுவிடும். அதுபோல போற்றிப் புறந்தந்து, சேர்த்துவைத்த சிறந்த பொருள்களுக்கும், அதனைக் காப்பவரைவிட,  திருடப் பார்ப்பவர்களே அதிகமாகும்.  "காப்பாரிற் பார்ப்பார் மிகும்' என்பது பழமொழி. (பார்ப்பார்} தாம் கைக்கொள்ளப் பார்ப்பவர்).

ADVERTISEMENT
ADVERTISEMENT