தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

14th Aug 2022 04:40 PM

ADVERTISEMENT

 


எங்கண் ஒன்று இல்லை, எமர் இல்லை, என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க- எங்கானும்
நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள்.(பாடல்-267)

(தெ- ரை) என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை. உறவினர்களும் இல்லை என்று எண்ணிக் கலங்கி ஒருவர் அழிவு தரும் தீய செயல்களைச் செய்தல் கூடாது. அவ்வாறு தீச்செயல்களைச் செய்யாமல் கைவிடுபவர்க்கு நலன்கள் அனைத்தும் வந்து சேரும். முன்னங்கைகள் நீண்டவருக்கு அவர்தம் தோள்களும் திரண்டு உருண்டு பெரியவனாக இருத்தல் உறுதி. அதுபோல நல்லோர்க்கு எல்லாம் அமையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT