தமிழ்மணி

கம்ப நில்! பாரதியைக் கண்டேன்!

12th Sep 2021 10:48 PM

ADVERTISEMENT

 


"கம்ப நில்! பாரதியைக் கண்டேன் உன் வாரிசாக' என்று சொல்லும் அளவிற்குப் பாரதியின் பாக்கள் அமைந்துள்ளன. கம்பன் காவியத்தில் சீதை ஆவி குலைவுற்று நிற்கின்றாள். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி ஆடை குலைவுற்று நிற்கின்றாள்.

"செக்கு' (ஸ்ரீட்ங்வ்ன்ங்) கிழித்துக் கொண்டிருந்த வ.உ.சி. நாட்டிற்காக செக்கு இழுக்கும் நிலைக்கு வந்தார். பாரதி, வ.உ.சி. அவர்களைச் சிறையில் சென்று பார்த்தபோது, ""அந்த முகம் சிறை செல்லுமுன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் எந்தவித மாற்ற முமில்லை'' என்றார். இதனைக் கம்பன்,

"மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத்திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்'

ADVERTISEMENT

என்று கூறுவான். 

("கம்பனில் பாரதியைக் கண்டேன்' என்ற தலைப்பில் புதுவை கம்பன் விழாவில் 1982 குமரி அனந்தன் பேசியதிலிருந்து...)

Tags : tamilmani Stand on the pole! I saw Bharti!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT