தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

12th Sep 2021 10:36 PM

ADVERTISEMENT


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரேர் அனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார்வு அறும். (பாடல்-219)


தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம். அதுபோலவே ஆராயுமிடத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன எல்லாம் அற்றுப்போகவே, அந்த அற்றுப்போன தன்மையானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும். "நீரற நீர்ச்சார்வு அறும்' என்பது பழமொழி.

Tags : tamilmani forerunner
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT