தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

3rd Oct 2021 04:31 PM

ADVERTISEMENT

 


தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது. (பாடல்-222)

தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை நீ, அவனிடம் சொல்லாதிருப்பாயாக. பாணனே, "பொய் தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல்' என்பது எவருக்குமே முடியாத செயலாகும். "அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது'  என்பது பழமொழி. (பாடபேதம்: தொடித்தோள் மடவார் துணை முலை ஆகம்)

Tags : tamilmani முன்றுறையரையனார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT