தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

21st Nov 2021 08:03 PM

ADVERTISEMENT

 


நயவர நட்டொழுகு வாரும் தாம்கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;
புயல்அமை கூந்தற் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க்கு உரையார் மறை.  -பாடல்}299)

மழை மேகத்தைப்போல கருமையாக விளங்கும் கூந்தலையுடைய, பொன்வளை அணிந்தவளே! அன்போடு தம்முடன் நட்பு கொண்டு நடப்பவர்களுள்ளும், தாம் கேட்ட ஒரு செய்தியைப் பிறருக்குச் சொல்லி ஆராயாது போகின்றவர்களாக ஒருவருமே இல்லாதிருக்கின்றனர். அதனால், சான்றோர்கள் ரகசியமான செய்திகளைக் கயமை குணம் உடையவர்களுக்கு ஒருபோதும் சொல்லவே மாட்டார்கள். "கயவர்க்கு உரையார் மறை' என்பது பழமொழி.

Tags : tamilmani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT