தமிழ்மணி

அந்திக்காப்பிடுதல்!

மீனாட்சி பாலகணேஷ்

எந்த ஒரு தீய சக்தியும் தன் குழந்தையை அண்டக்கூடாது என்று அக்குழந்தைக்கு அந்தி மாலைப்பொழுதில் தாய் "கண்ணூறு' (கண்ணேறு) கழிப்பாள். அதை "அந்திக்காப்பிடுதல்' என்பர். 

ஓர் அழகான காட்சி. சிறுவர்கள் சிறு தேரினை இழுத்து விளையாடியபடி உள்ளனர். அக்குழந்தைகளை செவிலித் தாயர் அந்தி மயங்கும்போதில் இல்லங்களுக்கு அழைத்துவந்து கண்ணூறு கழிக்கின்றதனை "மணிமேகலை'யின் ஒரு பாடலில் (தளர்நடை யாயமொடு தங்கா தோடி) காண்கிறோம்.
பெரியாழ்வார் தமது "திருமொழி'யில்  குழந்தை கண்ணனை, தாய் யசோதை அந்திக்காப்பிட விளிப்பதாகப் பாடியுள்ளார். "மாலை வேளையில் நான்கு தெருக்கள் கூடும் இடமான நாற் சந்தியில் நிற்க வேண்டாம்; நான் கூறுவதைக் கேள்! உனக்கு நான் அந்திக்காப்பிட வாராய்' என அன்னை விளிப்பதாக அமைந்த பாசுரம் இது.

"மன்றில் நில்லேல் அந்திப் போது 
...     ...   ...
நன்று கண்டாய் எந்தன் சொல்லு; 
நான் உன்னைக் காப்பிட வாராய்!' 

என்றும், "கஞ்சன் (கம்சன்) வஞ்சக நெஞ்சுடன் உன்னைக் கொல்வதற்காகப் பூதனை எனும் பேயை அனுப்பினான்; உன்னை வெளியே அனுப்ப நான் பயப்படுகிறேன். உனக்கு நான் காப்பிட வேண்டும் என்றும்;  "நீ விளையாடுமிடத்தில் உடல் முழுதும் சாம்பல் பூசி, எலும்பு மாலைகள் அணிந்து கையில் கபாலம் கொண்டு காண்போரை நடுக்கம் (கம்பம்) கொள்ளச் செய்யும் காபாலிகர்கள் மாலை நேரத்தில் நடமாடுகிறார்கள்; ஆகவே நீ பயந்து போகாதபடி இருக்க நான் உனக்குக் காப்பிட வேண்டும், வாராய்!' எனவும் அழைப்பதாகப் பாசுரம். இத்தகையோரைக் கண்டால் சிறு பிள்ளைகள் அச்சமடைவார்கள் என்பது தாயின் உளவியல் சிந்தனையில் எழும் காப்பு உணர்வு. "கம்பக் காபாலி காண் அங்கு / கடிது ஓடிக் காப்பிட வாராய்! 

இவ்வாறு அந்திக்காப்பிட அழைப்பவள், "வேதங்களாகிய இருக்குகளை (ரிக் வேதம்) இசைத்துக்கொண்டு உனக்குக் காப்பிட மறையோதுபவர்கள் சங்கில்  நீருடன் வந்து காத்துக் கொண்டுள்ளனர், வாராய்' எனக்கூறித் தான் அவனுக்குக் காப்பிடப்போகும் முறையையும் விளக்குகிறாள். "இருக்கொடு நீர்சங்கில்... உருக்காட்டும் அந்தி விளக்குஇன்றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்!'  என்கிறாள்.

குழந்தையின் நன்மையை வேண்டும் தாயுள்ளத்தின் அன்பின் பெருக்கை உளவியல், சடங்குகள் வழியாக உணர்த்தும் பாடல்கள் இவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT