தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

18th Jul 2021 04:30 PM

ADVERTISEMENT


உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும்
விழாந்தார்போல தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப
முழங்கு றைப்பச் சாண்நீளு மாறு. (பாடல்-211)

முழவினைப் போல ஒலி எழுப்பி ஆரவாரிக்கும் குளிர்ந்த கடற்கரைக்கு உரிய நாட்டினனே! முன் செய்த தீவினையால் பிறர் வருந்தியதையும் பாராட்டாது, அறவோர் அதன் காரணமாகத் தம்மை தண்டித்தமை கண்டும் திருந்தாது, ஒருவர் அவற்றின் பின்னரும் தாம் மிகவும் விருப்பம் உடையவர்போல தூய செயல்களையே செய்தல், சாண் அளவாக இருந்ததைக் குறைக்க அது முழம் அளவிலே வளர்ந்ததைப் போன்றதாகும். "முழங்கு றைப்பச் சாண்நீளு மாறு' என்பது பழமொழி. "சாண் ஏற முழம் வழுக்கல்' என்றும் இது வழங்கும்.

Tags : Tamilmani Proverbs four hundred: forerunner
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT