தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

கற்றதொன்று இன்றி விடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும்
மூத்தானே யாடு மகன் (பாடல்-186)

வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கை உடைய சேர்ப்பனே, தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் அறிவுடையவனே ஆவான். அவ்வாறு செயலைச் செய்து முடிப்பவன், செயலில் இளையவனே ஆனாலும், அவனை அறிவினால் முதிர்ந்தவன் என்றே கொள்ள வேண்டும். தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும். "இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT