தமிழ்மணி

ஒளவையும் ரமணரும்!

17th Jan 2021 12:32 PM

ADVERTISEMENT


திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஒரு சமயம் பெரிய விருந்து நடந்தது. அனைவரும் வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் அஜீரணத்தால் சங்கடப்பட்டனர்.

அப்போது அன்பர் ஒருவர் ஒüவையார் பாடிய (வயிறு பற்றிய) பாடலைப் பாடி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது'

அதைக் கேட்டு ரமண மகரிஷி உடனே ஒüவையார் பாடலைத் தழுவி, அவர் பாடலின் கடைசி வரிகளை அப்படியே வைத்து அப்போதே புதிதாக ஒரு பாடலைப் புனைந்து மொழிந்தார்.

ADVERTISEMENT

"ஒருநாழிகை வயிறுஎற்கு ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை உண்பது ஓயாய் - ஒருநாளும்
என் நோவு அறியாய் இடும்பைக்கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது'

-எதிரொலி விசுவநாதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT