தமிழ்மணி

பழமொழி: நானூறு: முன்றுறையரையனார்

3rd Jan 2021 11:24 PM

ADVERTISEMENT

 

வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் - உளவா
மதித்தஞ்சி மாறுமஃ தின்மையால் கூற்றம்
குதித்துய்ந்து அறிவாரோ இல். (பாடல்-183)

செல்வத்தால் வரும் வளமையும், புகழும், வலிமையும், வனப்பும், இளமையும், குடிப்பிறப்பும் இவையெல்லாம் உள்ளனவாக மதித்து, அதற்கு அஞ்சி தன் செயலைக் கைவிட்டுப் போகும் தன்மை, கூற்றத்திற்குக் கிடையாது. அதன் பிடியினின்றும் தப்பிப் பிழைத்தவர்கள் ஒருவருமே இலர். இவை எல்லாம் சாவினை வெல்லும் சக்தி உடையன அன்று. அதனால், நல்ல நெறியிலே செல்க என்பது கருத்து. "கூற்றம் குதித்துய்ந்து அறிவாரோ இல்' என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT