தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

8th Aug 2021 06:30 PM

ADVERTISEMENT


நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப்
தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர். (பாடல்-214)


நீறு படிந்த மாணிக்கம் தன் ஒளி குறைவதில்லை. தான் என்றும் தன் சிறப்புடன் ஒப்பற்றதாகவே விளங்கும். அதுபோல, தலைமகனுடைய பண்பினாலே விளங்கும் அவன் ஒளியானது தாற்றிப் போகப்பட்டதாயினும்கூட நூறாயிரவருடைய பெருமைக்கு ஒப்பாகவே விளங்கும். "தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர்' என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT