தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

1st Aug 2021 04:30 PM

ADVERTISEMENT

 

சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - சேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
எல்லாம்பொய் அட்டூணே வாய். (பாடல்-213)

தம்மைச் சேர்ந்தவர் ஒருவரை, அவரால் சேர்ந்து ஒழுகப்பட்டவர் முடிந்த உறவினராகக் கொண்டு நடந்தாலும், ஆராய்ந்து அவரை விட்டுப் போகாத வறுமையைக் கண்டு, அது போவதற்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாதபோது, அவர் செல்லும் நெறி வேறு என்ன உண்டாகுமோ? யாவரும் சமைத்து உண்ணும் உணவுக்கு ஆவன செய்வதே உண்மையான முயற்சியாகும். பிறவெல்லாம் பொய்யான செயலே. "எல்லாம் பொய் அட்டூணே வாய்' என்பது பழமொழி.

Tags : Tamilmani Proverbs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT