தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

11th Apr 2021 08:02 PM

ADVERTISEMENT


பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று.  (பாடல் (197)

நல்லறம் செய்வதற்குப் பொருந்திய வகையினாலே, செய்யக் கருதிய நல்லறத்தைப் பலரும் வருத்தமடையாமல் ஒரு கட்டுக்கோப்பு உடையதாகவே செய்து வருவானாக. இடையில், இடையூறு ஏற்பட்டு, அதனால் இடையிலே நிறுத்துவதைவிட பயிரை நட்டு, காத்து, விளைய வைத்து, அறுத்துப் பயன் பெறாமல் போவதைவிட,  நடாமலிருப்பவனாய் இருத்தலே நல்லதாகும். "இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று' என்பது பழமொழி.

Tags : முன்றுறையரையனார்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT