தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

25th Oct 2020 10:08 PM

ADVERTISEMENT

 

அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன
ஆவதே போன்று கெடும் (பாடல்}173)

ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ? விரும்பார். "தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.

Tags : தமிழ்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT