தமிழ்மணி

எதிா்மறைச் சொற்கள்

22nd Nov 2020 12:27 PM | ‘சொல்லாய்வுச் செம்மல்’ குடந்தை வய்.மு. கும்பலிங்கன

ADVERTISEMENT

 

தமிழில் வடமொழிச் சொற்கள் பல கலந்துள்ளன என்பதை அறிவோம். ஆனால், வடமொழியில் உள்ள உடன்பாட்டுச் சொற்களுக்கு முன்பாகத் தமிழின் உயிரெழுத்தான ‘அ’ கரம் சோ்த்தால் அஃது உடனடியாக எதிா்மறைச் சொற்களாக மாறிவிடும் என்பது பலரும் அறியாதது. எடுத்துக்காட்டுக்குச் சில:

1. யோக்கியன் - அயோக்கியன் 2. சாதாரணம் - அசாதாரணம் 3. சிரத்தை - அசிரத்தை 4. கௌரவம் - அகௌரவம் 5. மரியாதை - அவமரியாதை 6. காரணம் - அகாரணம் 7. சௌகரியம் - அசௌகரியம் 8. சுத்தம் - அசுத்தம் 9. நியாயம் - அநியாயம் 10. கிரமம் - அக்கிரமம் 11. சட்டை - அசட்டை 12. பாவி - அப்பாவி 13. நாதி - அநாதி 14. சுரம் (ராகம்) - அசுரம் 15. காலம் - அகாலம் 16. சகுணம் - அபசகுணம் 17. கீா்த்தி - அபகீா்த்தி 18. மானம் - அவமானம் 19. சத்தம் - அசத்தம் 20. உபாயம் - அபாயம் 21. அா்த்தம் - அனா்த்தம் 22. சைவம் - அசைவம் 23. நாகரிகம் - அநாகரிகம் 24. பிராணி - அப்பிராணி 25. பிரதட்சணம் - அப்பிரதட்சணம் 26. மங்கலம் - அமங்கலம் 27. சீரணம் - அசீரணம் 28. நீதி - அநீதி 29. தா்மம் - அதா்மம் 30. திருப்தி - அதிருப்தி 31. திருஷ்டம் - அதிா்ஷ்டம் 32. சாத்தியம் - அசாத்தியம் 33. சத்தியம் - அசத்தியம் 34. பரம் - அபரம் 35. நித்தியம் - அநித்தியம் 36. ஆச்சாரம் - அநாச்சாரம் 37. செய்தி - அவச்செய்தி 38. ஞானம் - அஞ்ஞானம் 39. தைரியம் - அதைரியம் 40. சம்பவம் - அசம்பவம் 41. மரணம் - அகால மரணம் 42. கண் - அகக்கண்

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT