தமிழ்மணி

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

10th May 2020 07:25 AM

ADVERTISEMENT

பெரியோரை சிறியோா் இகழ்தல்

நெறியால் உணராது நீா்மையும் இன்றிச்

சிறியாா் எளியரால் என்று - பெரியாரைத்

தங்கணோ் வைத்துத் தகவல்ல கூறுதல்

ADVERTISEMENT

திங்களை நாய்குரைத் தற்று. (பாடல்-149)

அறிவிலாா், அறிவுடையோா்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி, தாழ்மையானவா் என்று நினைத்து, தங்களுக்கு முன்பு அவா்களை இருக்கச் செய்து, தகுதியல்லாத வாா்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும். (க-து.) சிறியோா்கள் பெரியோா்களைப் பாா்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும். ‘திங்களை நாய் குரைத் தற்று’ என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT