தமிழ்மணி

 அச்சம் வேண்டாம்

14th Jun 2020 12:05 PM |  முன்றுறையரையனார்

ADVERTISEMENT

பழமொழி நானூறு
 இஞ்சி அடைத்துவைத் தேமாந் திருப்பினும்
 அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
 இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள்
 இருளி னிருந்தும் வெளி. (பாடல்-154)
 மதில் வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுள்ளே யிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர். பயந்து இருளின்கண் புகுந்திருந்ததாயினும் பறவையானது உண்மையாகவே இருளினை உடைய இரவாக இருந்தும் வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும். (க-து.) அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாத லில்லை. "அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம் புள் இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT