செறலிற் கொலைபுரிந்து சேணுவப்பா ராகி
அறிவின் அருள்புரிந்து செல்லார் பிறிதின்
உயிர்செகுத் தூன்றுய்த் தொழுகுதல் ஓம்பார்
தயிர்சிதைத்து மற்றொன் றடல். (பாடல்-164)
பிற உயிர்களுக்கு அறிவினால் அருள் செய்து மறுமை இன்பத்தையடையாராகி, அறிவின் மயக்கத்தால் உயிர்களைக் கொலை செய்து மறுமை இன்பத்தை அடையப் போவதாக மன முவப்புடையராகி, அதன் பொருட்டுப் பிறிதொன்றனது இனிய உயிரை நீக்கி, புலாலை மனம் பொருந்தி உண்டு ஒழுகுதல், உடலைப் பாதுகாவாதார் சுவை கருதித் தயிரினை அழித்து மற்றோருணவாக மாற்றிச் சமைத்தலோ டொக்கும். "தயிர் சிதைத்து மற்றொன்று அடல்' என்பது பழமொழி.