வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

 தீயவரை நண்பராகக் கொள்ள வேண்டாம்  

By முன்றுறையரையனார்| Published: 08th September 2019 01:38 AM

பழமொழி நானூறு
 தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
 இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
 யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே
 தேவரே தின்னினும் வேம்பு. (பாடல்-114)
 தெளிவாக நட்பு பூண்ட ஒருவரை, ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால், நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி, அவரை நம்பாதொழிக. உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்கும் தன்மையது. (அதுபோல), நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர். "கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு' என்பது பழமொழி.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்