தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

17th Nov 2019 06:09 AM

ADVERTISEMENT

 

தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல். (பாடல்-124)

(அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், அகன்ற உலகின்கண் எவ்விடத்தும் வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத் தீர்த்து விடுதலோ டொக்கும். (க-து.) ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களைய முற்படுதல் வேண்டும். "வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல்'  என்பது பழமொழி.

ADVERTISEMENT
ADVERTISEMENT