பழமொழி நானூறு

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே! வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும், இடையிட்ட நாட்டின்கண் உள்ள


முன்றுறையரையனார்

உட்பகை கொடியது: 
வெள்ளம் பகையெனினும் வேறிடத்தார் செய்வதென்
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்புப்
புள்ளொலிப் பொய்கைப் புனலூர அஃதன்றோ
அள்ளில்லத் துண்ட தனிசு.    (பா-98)

பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே! வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும், இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது? கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே, சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனை ஒன்குமன்றோ? (க-து.) அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.

"அள்ளில்லத் துண்ட தனிசு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com