செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

Published: 16th June 2019 02:12 AM


எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.    (பா-102)

பாண்டியனும்,  எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து, தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று, கதவையிடித்த குற்றத்தை நினைத்து  தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்)  அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச் செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை. (க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீய செயல்களைச் செய்யார். "காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நீ உயிர், உடல் நானே!
இந்த வாரம் கலாரசிகன்
உயிர்த்தெழுவாயாக!
ஆழ்வார் பாசுரங்களில் அருந்தமிழ்க் குறள்!
பழமொழி நானூறு