செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

பூவிழும் ஓசையிலும் பொலிந்தது காதல்

DIN | Published: 09th June 2019 01:28 AM

அவன் இரவிலே வர ஆசைப்பட்டான். தோழிக்கும் உடன்பாடுதான். ஆயினும், இரவிலே உறங்கிவிட்டால் என் செய்வது? இதிலும் ஓர் உளவியல் என்னவென்றால், "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்பதுதான் அது.
 "கொன்ஊர் துஞ்சினும் யாம்சுஞ் சலமே
 எம்இல் அயலது ஏழில் உம்பர்
 மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
 அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
 மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே' (138)
 தலைவ! எம் ஊர்க்குப் பக்கத்தே ஏழில் குன்றம் உளது. அதன் மேலே நொச்சி மரங்கள் உள்ளன. அவற்றின் இலைகள் மயிலின் காலடி போல, கவர்த்தனவாய் இருக்கும். அதில் கரிய பூங்கொத்துகள் உள. அழகுமிகும் மெல்லிய கிளைகளில், நன்கு முதிர்ந்த நீலமணி போலும் பூக்கள் கீழே உதிர்ந்துவிழும் ஓசை, நள்ளிரவில் எங்கட்கு நன்கு கேட்கும். அதனால், பெரியே ஊரே ஆழ்ந்து உறங்கினும் நாங்கள் உறங்க மாட்டோம்!
 (தமிழண்ணலின் "உள்ளங்கள் ஒன்றிடும்
 அன்றில் பறவைகள்' நூலிலிருந்து...)
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்த வார கலாரசிகன்
மொழிபெயர்ப்புச் சிக்கல்களும், தெளிவும்!
படிக்க வேண்டிய பாமருவு நூல்!
வண்டுக்குத் தோற்ற வஞ்சியர்!
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்